Type Here to Get Search Results !

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் கோலி





ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தில் தொடருகிறார்.  அமெரிக்காவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், 67 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 31-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.  ரோஹித் சர்மா 5 இடங்கள் முன்னேற்றத்தை சந்தித்து 17-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதே தொடரில் அடித்து விளாசிய மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லீவிஸ் 51-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  அஸ்வின் முன்னேற்றம்: டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 7-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் 67-ஆவது இடத்துக்கும், முகமது சமி 82-ஆவது இடத்துக்கும் ஏற்றத்தை சந்தித்துள்ளனர். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, தரவரிசையில் 104-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  இந்தியா 2-ஆவது இடம்: டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 126 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி 132 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad