Type Here to Get Search Results !

சாப்பிட்ட உடனே அல்லது சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா






உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும். இதனால் தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் மேலும், சில உடல்நல சிக்கல் உண்டாகலாம்...  உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸின் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும். உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக தாகம் எடுத்தாலோ, விக்கல் எடுத்தாலோ, குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருக்கின்றது.உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்வோர் சில மருந்துகளை உணவுக்கு முன்னும், பின்னும் சாப்பிட வேண்டும் என அறிவுரைக்கப்படுவார்கள். அவர்கள் குறைந்த அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.  ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.  உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரைக்கப்படுகிறது. உணவு சாப்பிட்ட 1 - 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.  உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad