Type Here to Get Search Results !

சமுத்திரகனியுடன் மோதும் அர்ஜூன்



ஜெய்ஹிந்த்-2 படத்தைத் தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் திரைக்கு வரும் படம் ஒரு மெல்லிய கோடு. இந்த படத்தில் அவருடன் ஷாமும் நடித்துள்ளார். ஏற்கனவே அர்ஜூன் நடித்த வனயுத்தம் படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ள இந்த படம் கன்னடத்தில் கடந்த பிப்ரவரி மாதமே ரிலீசாகி விட்டது. ஆனால் தமிழில் ஜூலை 1-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும், இதே நாளில் சத்யராஜ்-சிபிராஜின் ஜாக்சன் துரை, சமுத்திரகனியின் அப்பா மற்றும் ஒன்பதிலிருந்து பத்து வரை, வில்லாதி வில்லன் வீரப்பன் உள்பட பல படங்கள் வருகின்றன. இதில் சத்யராஜின் ஜாக்சன் துரை மற்றும் சமுத்திரகனியின் அப்பா படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்தபோதும், ஒரு மெல்லிய கோடு படம் கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறாராம் அர்ஜூன். மேலும், முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த மனீஷா கொய்ராலா இந்த படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad