Type Here to Get Search Results !

சிம்புவுக்கு கைகொடுத்த நயன்தாரா




சிம்பு நடிப்பில் வெளியான வாலு படம் ஏகப்பட்ட தடைகளுக்கு பிறகு வெளியானது. ஆனபோதும் சிம்பு பெரிதாக எதிர்பார்த்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சில தினங்களிலேயே தியேட்டர்களை விட்டு ஓடி விட்டது. ஆனால் தற்போது அவர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள இது நம்ம ஆளு படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மூன்று நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. அந்த வகையில, இரண்டே நாளில் அந்த படம் 10 கோடி வரை வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள்.இந்த படத்தை வெளியிட்டுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் சரியான தியேட்டர்களில் படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறும் அதே வேளையில், இந்த படத்தின் வசூலுக்கு நயன்தாராவும் இன்னொரு முக்கிய காரணமாகியிருக்கிறார் என்கிறார்கள். சமீபகாலமாக நயன்தாராவுக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகியிருப்பதோடு, அவரது முன்னாள் காதலரான சிம்புவுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றே இளவட்ட ரசிகர்கள் தியேட்டர் களுக்கு விசிட் அடிக்கிறார்களாம். ஆக, இது நம்ம ஆளு படத்தின் வசூலுக்கு நயன்தாராவும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad