Type Here to Get Search Results !

இளையராஜா இசையில் மீண்டும் கமல்






கமல்ஹாசன் இதுவரை சினிமாவில் 41 படங்களில் 69 பாடல்களை பாடியிருக்கிறார். அந்த வகையில் இளையராஜாவின் இசையில் அவர் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். அவள் அப்படித்தான் படத்தில் பன்னீர் புஷ்பங்களே என்ற பாடலை முதன்முதலாக அவர் இசையில் பாடிய கமல், தொடர்ந்து சகலகலா வல்லவனில் இளமை இதோ இதோ, விக்ரம் படத்தில் விக்ரம், நாயகனில் தென்பாண்டி சீமையிலே, மைக்கேல் மதன காமராஜில் சுந்தரி நீயும், தேவர் மகனில் இஞ்சி இடுப்பழகி, விருமாண்டியில் உன்னை விட இந்த உலகத்தில் என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய கமல், சமீபத்தில் இளையராஜாவின் இசையில் முத்துராமலிங்கம் படத்துக்காக தெற்கு தேச சிங்கமடா என்ற பாடலையும் பாடினார். மேலும், சமீபகாலமாக கமல் நடிக்கும் படங்களில் இளையராஜாவின் இசை இடம்பெறவில்லை என்றபோதும், லைகா தயாரிப்பில் ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். இந்த படத்திலும் ஒரு மெலோடி பாடலை பாடுகிறாராம் கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில்தான் நடைபெறுகிறதாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad