Type Here to Get Search Results !

சிம்பு - விஷால் மோதல்





சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படமும், நடிகர் விஷால் நடித்த, மருது படமும், ஒரே நாளில் வெளியாகின்றன. நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், இது நம்ம ஆளு. இந்த படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பல தடைகள் தாண்டி இப்படம் ரிலீஸாக தயாராகிவிட்டது.  நடிகர் விஷால், நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்க, குட்டிப்புலி, கொம்பன் படங்களால் பிரபலமான முத்தையா இயக்கிய படம், மருது. இந்த படத்தை, ஐங்கரன் நிறுவனம் வெளியிட உள்ளது. மருது மற்றும் இது நம்ம ஆளு படங்கள், மே, 20ல் வெளியாகின்றன.  ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலின் போது காரசாரமாக மோதிக்கொண்டனர் சிம்பு - விஷால். இந்தச்சூழலில் இவர்களது படங்கள் ஒரேநாளில் ரிலீஸாக இருப்பதால், இந்த இரு படங்களில், எந்தப் படம் வசூல் ரீதியில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad