Type Here to Get Search Results !

விஜய்சேதுபதிக்கு யார் வில்லன்




தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு எந்த ஒரு கிசுகிசுவிலும், வில்லங்கத்திலும் அதிகம் சிக்காத ஹீரோவாக விஜய் சேதுபதி இருக்கிறார் என்றுதான் இத்தனை நாட்களாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், விஜய் சேதுபதியின் படங்களை முடக்குவதற்கும் அதை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் சில வில்லன்கள் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதியே அவருடைய படங்களின் தோல்விகளைப் பற்றிப் பதிலளித்திருக்கிறார். அதில் பண்ணையாரும் பத்மினியும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் படத்தின் தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகச் சொல்ல இங்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதோடு புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் தோல்விக்கும் சிலர் செய்த வேலைகள்தான் காரணம், அது என்ன என்று தனக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அதைச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார். அந்த இரண்டு படங்களின் வெற்றியையும் மிகவும் எதிர்பார்த்திருந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் படங்களின் தோல்வி அவரிடமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தற்போது அவரே வாய் திறந்து சொல்லியிருக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக சதி செய்த வில்லன்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad