Type Here to Get Search Results !

உலக சாதனை படைத்த தோனி




ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி  உலக சாதனை படைத்துள்ளார்.  ஜடேஜா பந்து வீச்சில், ஜேம்ஸ் ஃபால்க்னரை, தோனி  ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார்.  இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலுமாக சேர்த்து மொத்தம் 140 ஸ்டம்பிங்குகளை செய்து அசத்தியுள்ளார்.  இதற்கு முன்னதாக இலங்கை கீப்பர், குமார் சங்ககாரா 139 ஸ்டம்பிங்குகள் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது.  தோனி  இதனை முறியடித்துள்ளார், தொடர்ந்து  இலங்கையின் ரொமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தானின் மொயின் கான் 93 ஸ்டம்பிங்குகளுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 92 ஸ்டம்பிங்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad