Type Here to Get Search Results !

2016 மார்ச்சில் ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள்: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான்


The ICC World Twenty20 (also referred to as the World T20, and wrongly as the T20 World Cup) is the international championship of Twenty20 cricket. Organised by cricket's governing body, the International Cricket Council (ICC), the tournament currently consists of 16 teams, comprising all ten ICC full members and six other associate or affiliate members chosen through the World Twenty20 Qualifier. The event has generally been held every two years, although there is a four-year gap between the next two scheduled tournaments (2016 in India and 2020 in Australia). All matches played are accorded Twenty20 International status.  Five tournaments have so far been played, and no team has yet won the tournament on multiple occasions. The inaugural event, the 2007 World Twenty20, was staged in South Africa, and won by India, who defeated Pakistan in the final at the Wanderers Stadium in Johannesburg. The 2009 tournament took place in England, and was won by the previous runner-up, Pakistan, who defeated Sri Lanka in the final at Lord's. The third tournament was held in 2010, hosted by the countries making up the West Indies cricket team. England defeated Australia in the final in Barbados, which was played at Kensington Oval. The fourth tournament, the 2012 World Twenty20, was held in Asia for the first time, with all matches played in Sri Lanka. The West Indies won the tournament by defeating Sri Lanka in the final, winning its first international tournament since the 2004 Champions Trophy.[3] The fifth tournament, the 2014 ICC World Twenty20, was hosted by Bangladesh, and was won by Sri Lanka, who became the first team to play in three finals.



2016 மார்ச்சில் ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள்: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான்

10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளின் பிரதான சுற்று மார்ச் 15-ம் தேதியன்று இந்தியா-நியூஸிலாந்து மோதும் போட்டியுடன் தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணியும் இடம்பெறுகிறது.

குரூப்-1-ல் கடந்த சாம்பியன் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியுமாக மொத்தம் 10 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

பிரிவு ஏ: வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஹாங்காங், ஆப்கானிஸ்தான்

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன்.

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள குரூப் 2-விலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி குரூப் 1 அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும்.

பிரதான உலகக் கோப்பை டி20 போட்டித் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 15-ம் தேதியன்று இந்தியா-நியூஸிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

மார்ச் 19-ம் தேதி தரம்சலாவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிறகு மார்ச் 23-ம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்ற அணியுடன் இந்தியா பெங்களூருவில் மோதுகிறது, பிறகு மார்ச் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஆடவர் அணிகள் உலகக் கோப்பைக்கு மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் டாலர்களாகும். 2014-ம் ஆண்டு தொடரைக் காட்டிலும் இது 86% அதிகரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1-ல் மார்ச் 16-ம் தேதி இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணி மோதுகிறது. பிறகு இங்கிலாந்து அணி மார்ச் 18-ல் தென் ஆப்பிரிக்காவை மும்பையிலும் தகுதிச் சுற்றிலிருந்து வந்த அணியை மார்ச் 23ம் தேதி புதுடெல்லியிலும் மீண்டும் 26-ம் தேதி புதுடெல்லியில் இலங்கையையும் எதிர்கொள்கிறது.

சூப்பர் 10 மோதும் அணிப் பிரிவுகள் வருமாறு:

குரூப் 1: இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து மற்றும் தகுதிச் சுற்று பிரிவு பி-யில் வென்ற அணி

குரூப் 2 : இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தகுதிச் சுற்று பிரிவு ஏ-ல் வென்ற அணி.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad