Type Here to Get Search Results !

பாகுபலியின் கிளிக்கி மொழியில் பாடல்





ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. இதில் இடம் பெற்ற காலகேய வில்லன் கிளிக்கி என்னும் மொழியை பேசுவார். இந்த மொழியை இப்படத்திற்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. இந்த மொழியில் தற்போது ‘பாஹா கிளிக்கி’ என்னும் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.  750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் இது. இந்த பாடலை பிரபல பாப் பாடகி ஸ்மிதா உருவாக்கியிருக்கிறார். இவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ஹே ரப்பா’ என்னும் பாடல் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது உருவாக்கியுள்ள ‘பாஹா கிளிக்கி’ பாடல், கேட்போரை ஆட்டம் போட வைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் தேவகட்டா. ‘பாஹா கிளிக்கி...ராஹா கிளிக்கி...’ என்று தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad