Type Here to Get Search Results !

இளமையான ரஜினிகாந்த்




ரஜினிகாந்த், 'எந்திரன்-2' படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இந்த படம், கடந்த 2010-ல் வெளிவந்த 'எந்திரன்' படத்தின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அவர், 'வசீகரன்' என்ற இளம் விஞ்ஞானி வேடத்தில் வருகிறார். இதற்காக, 'ஹாலிவுட்' ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.   கழுத்தை ஒட்டிய பனியன், கோட்-சூட், 'பிரஞ்சு பியர்டு' வடிவில் தாடி என ரஜினிகாந்த் இளமையாக மாறி இருக்கிறார். அவரது மிடுக்கான வேடத்தை பார்த்து பழைய இளம் ரஜினிகாந்த் திரும்ப வந்தமாதிரி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படத்தில், வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார்.  படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த வருடம் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்து வரும் 'கபாலி' படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தமிழ் புத்தாண்டில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad