Type Here to Get Search Results !

ரூ.4ல் சினிமா பார்க்கலாம் வாங்க



ஊட்டி :வரலாற்று சிறப்புமிக்க, ஊட்டி, 'அசெம்ப்ளி ரூம்ஸ்' தியேட்டரில், நான்கு ரூபாய்க்கு படம் பார்க்கலாம். கடந்த, 1886ல், ஆங்கிலேயர் காலத்தில், கவர்னர் வெலிங்டனின் மனைவி, லேடி வெலிங்டன், கலை நிகழ்ச்சிகள் நடத்த, ஊட்டி, தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த, ஒரு கட்டடத்தை, 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். 1900 ஆண்டுக்குப் பின், இக்கட்டடம், அசெம்ப்ளி ரூம்ஸ் என்ற திரையரங்காக மாற்றப்பட்டது. லேடி வெலிங்டன், 'கலாசாரத்தை வளர்க்கும் வகையில் மட்டுமே, இந்த திரையரங்கை பயன்படுத்த வேண்டும்; அரசியல் உட்பட பிற விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது' என, நிபந்தனை விதித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், அந்த விதிமுறை மீறவில்லை

       தமிழக கவர்னரை காப்பாளராகவும், நீலகிரி கலெக்டரை தலைவராகவும், பொதுமக்களை அறங்காவலர்களாகவும் கொண்டு, இந்த தியேட்டர் செயல்பட்டு வருகிறது.நீலகிரி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதி, 22 லட்சம் ரூபாய் மற்றும் தியேட்டர்வருமானம், அறங்காவலர்கள், ரசிகர்களின் நன்கொடை என, மொத்தம், 70 லட்சம் ரூபாய் செலவில், தியேட்டர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாக நடந்த பராமரிப்புப் பணிக்கு பின், நேற்று முன்தினம், நீலகிரி கலெக்டர் சங்கர், இந்த தியேட்டரை திறந்து வைத்தார். 'பார்க்கிங்' வசதிஅப்போது அவர் கூறியதாவது:பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த தியேட்டர், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது; 344 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. '2 கே புரஜெக்டர், டி.டி.எஸ்.,' ஆகிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த தியேட்டர், சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தியேட்டர் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஆங்கிலேயர் காலத்தில், சினிமா ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்பட்ட, புரஜெக்டர், ரீல், டிக்கெட் கொடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், தியேட்டர் முகப்பில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன''.இந்த தியேட்டரில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிப் படங்கள் வெளியிடப்படுகின்றன. தினசரி மதியம், 2:30 மணி, மாலை, 6:30 மணிக்கும், சனிக்கிழமைகளில், கூடுதலாக, இரவு, 8:30 மணிக்கும் காட்சிகள் காண்பிக்கப்படும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad