சர்வதேச போட்டிகளில் இருந்து விரேந்திர சேவாக் ஓய்வு







இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான விரேந்திய சேவாக் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு சர்வதேச போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்படவில்லை.  இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் Master Campion League போட்டிகளில் விளையாடவுள்ளதாக கூறினார்.  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விளையாடும் இந்த விளையாட்டில் நீங்கள் எப்படி விளையாட முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டதும், நான் ஓய்வு பெறவில்லை என்றால்தான் என்னால் விளையாட முடியாது என்று தெரிவித்தார்.  மேலும், இந்தியா திரும்பியதும் எனது ஓய்வை பற்றி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.  இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் சில தினங்களுக்கு முன் தனது ஓய்வை அறிவித்த நிலையில் சேவக்கின் இந்த பேச்சு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url