Type Here to Get Search Results !

டெஸ்ட் தரவரிசை இந்திய வீரர்கள் ஏமாற்றம்






சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா சார்பில் பட்டியலில் எந்த ஒரு வீரரும் இடம்பெறவில்லை. டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (913 புள்ளி) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (910) உள்ளார். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (890) மூன்றாவது இடம் வகிக்கிறார்.  சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான துபாய் டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 5 இடம் முன்னேறி, ஐந்தாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. மற்றபடி கோஹ்லி, புஜாரா முறையே 13, 20வது இடத்தில் உள்ளனர்.  பவுலர்களுக்கான தரவரிசையில், துபாய் டெஸ்டில் (8 விக்.,) அசத்திய பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா முதல் முறையாக 2வது இடம் (827) பிடித்தார். முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (905), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (824) உள்ளனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 8வது இடம் பெற்றார் அணிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா (125 புள்ளி), ஆஸ்திரேலியா (106), இங்கிலாந்து (102) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்திய அணி (100) நான்காவது இடத்தில் உள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad