கத்தி படம் வசூலை முறியடிக்குமா புலி படம் ?














சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியான படம் புலி. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படத்தின் வசூலும் கொஞ்சம் பின் தங்கியுள்ளதாகவே சொல்லப்படுகிறது.  தமிழகத்தின் வசூல் படி முதல் நாள் வசூலாக புலி படம் 10.75 கோடிகளை வசூலித்துள்ளதாம். எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகவில்லை. விஜய்யின் முந்தையப் படமான கத்தி முதல்நாளில் 12.5 கோடிகளை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் கத்தி படம் 100 கோடி க்ளப்பில் இணைந்தது.  புலி அந்தச் சாதனையை முறியடிக்குமா என்பது, படத்திற்கு வரும் எதிர்மறைக் கருத்துகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் உருவாகியுள்ளது. அதேசமயம் பள்ளிகளின் காலாண்டுவிடுமுறை காரணமாக வசூலுக்குக் குறைவிருக்காது என்றும் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url