புகைப்பிடிக்கும் காட்சியை ட்விட்டரில் வெளியிட்டு சிக்கிய நடிகை சமந்தா!





புகைபிடிப்பது போன்ற தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை சமந்தா. அவரின் இந்த செயலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் சமந்தா ஜோடியாக நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி என இரு வேடங்களில் நடித்துள்ள சமந்தா, வில்லி கதாபாத்திரத்தில் குரூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோடு, சுருட்டு பிடித்து மூக்கில் புகை விடும் காட்சியிலும் நடித்துள்ளார். புகைபிடிக்கும் வில்லி வேடத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.  இதனிடையே, ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் திருட்டு வி.சி.டியில் இருந்து சமந்தா புகைபிடிக்கும் காட்சியை சிலர் இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர். அந்த படங்களை சேகரித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளது அவருக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  "சமந்தாவின் இந்த நடவடிக்கை திருட்டு வி.சி.டியை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று விநியோகஸ்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் கூறுகையில், "ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சமந்தா புகைபிடிக்கும் காட்சியில் நடித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. புகைபிடிக்கும் படங்களை சமந்தா தனது ட்விட்டரில் வெளியிட்டு இருப்பது பெண்களை புகைபிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுவது போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url