உங்களிடம் காதல் இருக்கிறதா? அப்படியென்றால் வெளிப்படுத்துங்கள்












தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த நெருக்கமான காதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்ற கேள்விக்கான பதில் உங்களிடமே இருக்கிறது.  திருமணமான புதிதில் உங்களுக்குள் இருந்த புரிதலும், பிரியமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், சிறிது நாட்களில் வெயிலில் வைத்தப் பனிக்கட்டியை போல உருகிவிடுகிறது.  உங்கள் துணையோடு கொஞ்ச நேரம் எழில்மிகு மாலை நேரத்தில் கைக்கோர்த்து சிறிது தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள்.  குறைந்தது பக்கத்தில் இருக்கும் பூங்கா அல்லது கோவில்களுக்கு கூட போய் வரலாம்.  அந்த நடைப்பயணம் உங்கள் உறவை இணைக்கும் பாலமாய் இருக்கும். அன்பின் வெளிப்பாட்டை அதிகப்படுத்தும்.  பெண்களுக்கு மிகவும் விரும்புவது அவர்களது துணையோடு கைக்கோர்த்து நடப்பது.  நீங்கள் அவர்களின் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர்ந்தாலே போதும். உறவு வலிமையடைந்துவிடும்.  தினமும் அவர்களை பற்றி நலம் விசாரிப்பது, என்ன செய்கிறாய் என கேட்பது என உங்கள் துணையைப் பற்றி நீங்கள் தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் கேட்டு விசாரிப்பது அவசியம்.  இந்த கலந்துரையாடலே உங்களது உறவை வளப்படுத்திவிடும்.  இதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கை துணைக்கு பிடித்த விடயங்களை தெரிந்துவைத்துக்கொண்டு, அவர்களுக்கே தெரியாமல் இன்ப அதிர்ச்சி கொடுங்கள்.  இல்லறம்....நல்லறமாய் அமையும். 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url