ரஞ்சிக் கோப்பையில் : சுழலில் மிரட்டிய ஜடேஜா




ரஞ்சிக் கோப்பையில்  போட்டியில் ஜடேஜா 13 விக்கெட்டுகள் வீழ்த்த, சவுராஷ்டிரா அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சிக் கோப்பைத்  தொடரில் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதில் ராஜ்கோட்டில் நடந்த ‘சி’ பிரிவு போட்டியில் சவுராஷ்டிரா- ஐதராபாத் அணிகள் மோதின.  இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 102 ஓட்டங்களும், ஐதராபாத் 148 ரன்களும்  எடுத்தன. 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  பின்னர் 170 ரன்கள்  எடுத்தால் வெற்றி என  2வது இன்னிங்சை தொடங்கிய ஐதராபாத் அணி ஜடேஜாவின் சுழலில் சிக்கியது. இதனால் 134 ரன்களுக்கு  சுருண்டது.  இதன் மூலம் சவுராஷ்டிரா அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 6, 2வது இன்னிங்சில் 7 என மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் ஜடேஜா.  இதற்கு முன்னதாக திரிபுராவுக்கு எதிராக 11, ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 13 என மொத்தம் 3 போட்டியில் 37 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார் ஜடேஜா.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url