ரகசியமாக முடிந்த இலியானா நிச்சயதார்த்தம் ?








தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் வலம் வந்தன. இருவரும் சேர்ந்து இருப்பது போல பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது கூடுதல் செய்தி.
சமீபமாக இவருக்கு எந்தப் பட வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் இலியானாவுக்கும் ஆண்ட்ரூவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திரை நட்சத்திரங்கள் யாரையும் அழைக்கவில்லையாம் இருவரின் திருமணத்தையும் 3 மாதங்களில் முடிக்க இருவீட்டாரும் ஏற்பாடு செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இலியானா தற்பொழுது விலையுயர்ந்த வைர மோதிரம் கையில் அணிந்திருப்பதாகவும், இந்த மோதிரம் நிச்சயதார்த்தத்தின் போது ஆண்ட்ரூ அணிவித்திருக்கிறார் என்றும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url