Type Here to Get Search Results !

குற்றவியல்-படிப்பும் வேலைவாய்ப்பும்!!


குற்றவியல்-படிப்பும் வேலைவாய்ப்பும்




குற்றவியல் (கிரிமினாலஜி)

அன்றாடம், ஏதோ ஒரு தேடலை நோக்கி இயந்திரத்தனமாக ஓடி கொண்டிருக்கும் மனித வாழ்வில், பல வகையான சமூக சீர்கேடுகள், கொலை, திருட்டு போன்ற எண்ணில் அடங்காத பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன!
இத்தகைய குற்றங்களை கண்டறிவதிலும், தடயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்படியானால் குற்றவியல் துறையை தேர்ந்தெடுக்கலாம்.
குற்றவியல் துறை வெறும் குற்றங்களை மட்டும் படிக்கும் துறை அல்ல; குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும்  அறிவியல் சார்ந்த படிப்பாகும். மாணவர்களுக்கு செயல்முறை திறன் மூலம் குற்றங்களை விசாரித்தல், கண்காணித்தல், தடயங்களை சேகரித்தல் மற்றும் துறையின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளுதல் போன்ற திறன்கள் மேம்பட இத்துறை படிப்பு உதவும்.
எதை பற்றியது?

குற்றங்கள் நடப்பதற்கு, சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் முக்கிய காரணங்கள். எனவே, குற்றவியல் சார்ந்த படிப்பும்
  சமூகவியல், உளவியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளுடன் தொடர்புள்ளது. குற்றவாளிகளின் மனப்போக்கை புரிந்து கொள்வதற்கு, குற்றவியல் நிபுணர்கள் இத்துறை சார்ந்த பயிற்சியை பெற்றிருப்பது மிகவும் அவசியம்.
படிப்புகள்: 
இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், குற்றவியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது. இளநிலை  பிரிவில் பி.ஏ.,/ பி.எஸ்சி., முதுநிலை பிரிவில் எம்.ஏ., எம்.எஸ்சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
தகுதி: இளநிலை குற்றவியல் படிப்பிற்கு, மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம், அதேபோல், முதுநிலை குற்றவியல் படிப்பிற்கு, கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்:

வெளிநாடுகளில் இப்படிப்பிற்கான மவுசு மிக அதிகம். இந்தியாவில், குற்றவியல் படிப்பிற்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வங்கி, நிதி, சிறை, புலன் விசாரணை, உளவு மற்றும் லஞ்ச ஒழிப்பு
  துறைகளில் குற்றவியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து, ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் வாய்ப்புகளை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும்.
இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை இனி பார்ப்போம்.
சென்னை பல்கலைக்கழகம்: 
இந்தியாவில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம், பின்வரும் படிப்புகளை வழங்குகிறது.
* எம்.ஏ., (கிரிமினாலஜி அன்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ்)
* எம்.எஸ்சி., (சைபர் பாரின்சிக் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி)
* பிஎச்.டி., (கிரிமினாலஜி அன்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ்)
மேலும் விவரங்களுக்கு:
 www.unom.ac.in
தடயவியல் அறிவியல் கழகம், மும்பை: 
மும்பை தடயவியல் கல்விநிறுவனம், மும்பை பல்கலைக்கழகத்தோடு இணைந்ததாகும். வங்கிகள், துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தடய நிபுணர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. 

* பி.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்
* எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்
* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பாரின்சிக் சயின்ஸ்
 
* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் சைபர் அன்ட் டிஜிட்டல் பார்ன்சிக்ஸ்
மேலும் விவரங்களுக்கு:
 www.ifscmumbai.com
தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனம்:
இக்கல்விநிறுவனத்தில் தடய அறிவியல் துறையில் பணிபுரியும் வல்லுநர்களுக்கு, தேவை அடிப்படையில் தொழில் படிப்புகளை வழங்குகிறது. பொதுவாக, எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்  மற்றும் எம்.ஏ., கிரிமினாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு:
  www.nicfs.nic.in
குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர்: 
எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ், எம்.எஸ்., பாரின்சிக் பார்மசி, எம்.எஸ்., பாரின்சிக் நானோ டெக்னாலஜி ஆகிய முதுநிலை படிப்புகளும், சைபர் லா,  சைபர் கிரைம், பாரின்சிக் போன்ற டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
  www.gfsu.edu.in
அரசு தடய அறிவியல் நிறுவனம், அவுரங்காபாத்: 
மகாராஷ்டிரா அரசின், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையின் கீழ் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, பி.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ், எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ்,  போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பாரின்சிக் சயின்ஸ் மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டிஜிட்டல் அன்ட் சைபர் பாரின்சிக் சயின்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

மேலும் விவரங்களுக்கு:
 www.gifsa.in
இவை தவிர, ஐ.டி.எம்.ஆர்., போன்ற தனியார் பயிற்சி மையங்களும் இத்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad