ஆசிரியர் தேர்வு ரத்து வெளியானது கேள்வித்தாள்







மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், பிரைமரி ஆசிரியர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்து தேர்வு நடைபெறுவதாக இருந்தது.   இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தேர்வின் கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. கேள்வித்தாளை ரகசியமாக படம் பிடித்து, ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டதாக, அரியானா மாநிலம் ரெவாரி நகரில் 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து கேள்வித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த ஆசிரியர் தேர்வை கேந்திரிய வித்யாலயா ரத்து செய்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url