வித்தியாசமான அணுகு முறை: ஆண்டர்சன், பட்லரை விழிபிதுங்க வைத்த மிஸ்பா








இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ்  வென்று முதலில் பேட்டிங் செய்த  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள்  குவித்தது.  பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 242 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.  நேற்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள்  எடுத்திருந்தது.  யுனிஸ்கான் 71 ரன்களுடனும் , அணித்தலைவர் மிஸ்பா 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றிய மிஸ்பா:-  நேற்றைய நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இதில் யுனிஸ்கான் 45 ரன்களும் , மிஸ்பா 28 ரன்களும்  எடுத்து களத்தில் இருந்தனர்.  அப்போது அணித்தலைவர் மிஸ்பாவுக்கு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரசிட் பந்து வீசினார். அப்போது விக்கெட் கீப்பருக்கு அருகில் ஆண்டர்சன் முதல் ஸ்லிப்பில் பீல்டிங்கில்   ஈடுபட்டார்.  அந்த சமயம் அடில் ரசிட் லெக் ஸ்பின்னை மிஸ்பாவுக்கு வீச அதை லெக் ஸ்லிப் திசையில் ஸ்விப் செய்ய முயன்றார் மிஸ்பா. அதற்குள் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆண்டர்சன் லெக் திசையில் பந்தை பிடிக்க முன்னதாக ஓடிவிட்டனர்.  ஆனால் பந்தின் போக்கை கணித்த மிஸ்பா, பழைய ஷாட்டை மாற்றி ஆண்டர்சன் முன்னதாக இருந்த பக்கம் ஆடினார். இதனால் இருவரும் பந்தை பிடிக்க முடியாமல் ஏமாந்து போயினர் .



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url