Type Here to Get Search Results !

'அவரிடம்'........சில கேள்விகள்!!!





'அவரிடம்'........சில கேள்விகள்!!!






'பெண் பார்க்க வர்ராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க'ன்னுசொன்னதுமே, பெண் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு  பரபரப்பும்பப்ளிக் எக்ஸாம் எழுத போவது போன்ற  படபடப்பு பெண்ணிற்கும் ஏற்படுவது இயல்பு.



"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா?? தினமும் பட்டு புடவையிலா குடும்பம் நடத்த போறேன்.....எதுக்கு கல்யாண பெண் மாதிரி அலங்கரிச்சுக்க சொல்றாங்க??"




"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், அதை விட்டுட்டு.....பாட்டு பாடுன்னு கேட்கிறதெல்லாம், சுத்த பேத்தல், .......'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"




இப்படி தங்கள் ஆதகங்களை பெண்கள் வெளிப்படுத்த ஆரம்பித்த பிறகு, இயல்பான உடையில், சகஜமான சூழ்நிலையில் பெண்பார்க்கும் சம்பவங்கள் இன்று நடைபெற்றாலும், இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.




பையன் பெண்ணிடம் தனியா பேச      விருப்பப்படுறான்னு சொன்னாஅவனுக்கு  பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு  போய்டுச்சுஅடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா  பேசனும்னு சொல்லுவார்.


ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.





'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?' 'பேசினா தப்பா நினைப்பாறோ??' அப்படின்னு எல்லாம் தடுமாறாம......  இயல்பா இருங்க.
அதான் உங்க appearance test  பாஸ் ஆகிட்டீங்களே.......  ஸோ நோ மோர் டென்ஷன்!!

கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும். 




முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய  வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது     இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு         கேட்கலாம்.

தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.





அடுத்து அவருக்குபிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு  சம்மந்தமானதாக இருந்தால்உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.
அப்படியே 'ஜிம்க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.

நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால்திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது  விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது  நலம்.



தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.



கண்டதும் காதல் வரும்போது.... 


கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!




















































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad