சீரியலுக்கு வருகிறாரா டிடி

சீரியலுக்கு வருகிறாரா டிடி 





விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளில் தென்படுவதில்லை. மீண்டும் இவர் டிவிக்கு வருவாரா என்றால் அதற்கு பதில் கிடைக்காத நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

பலரும் டிடியை டிவி சீரியலில் நடிக்கச் சொல்லி அணுக அதற்கு கொஞ்சம் பொறுங்கள் நான் நேரம் வரும்போது சொல்கிறேன் என சொல்லியுள்ளாராம். மேலும் இவரின் மீடியா பயணமே டிவி சீரியலில் தான் துவங்கியது என்பது நாமறிந்ததே.
  இந்நிலையில் டிடி மீண்டும் சீரியலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய் டிவியின் செல்லம் என இப்போதும் சில விளம்பரங்கள் வரும் நிலையில் விஜய் டிவியின் சீரியலிலேயே டிடி நடிப்பாரா அல்லது வேறு சேனலின் சீரியலா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url