Type Here to Get Search Results !

திருமணத்திற்கு முன் ஆண்கள் செய்ய வேண்டியவை...


திருமணத்திற்கு முன் ஆண்கள் செய்ய வேண்டியவை...


வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்



உங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குங்கள். ஏனெனில், உங்களுக்கு வரப்போகும் துணைவியார் இவற்றை வாங்குமளவிற்கு, உங்களை சுதந்திரமாக விட்டு விடுவார் என்று சொல்லுவதற்கில்லை.

பிடித்த படங்களை பார்த்துக் கொள்ளுங்கள்



உங்களுக்குப் பிடித்த ஆக்ஷன் திரைப்படங்களை பாருங்கள். திருமணத்திற்குப் பிறகு, நீங்கள் பார்க்கக் கூடிய திரைப்படங்களின் சுவையில் 'மாற்றங்கள்' திணிக்கப்படலாம்.

சத்தியம் வேண்டாம்



எப்பொழுதும் இந்த பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக இருந்தால், பின் நாட்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். எந்தப் பெண்ணும், ஆபத்தில்லாத சத்தியங்களைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

நண்பர்களை சந்தித்துக் கொள்ளுங்கள்



பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த நண்பர்கள் அனைவரையும் அழைத்து சந்தியுங்கள். சந்திப்பு முடிவதற்கு முன்னதாக உங்களுடைய திருமணத்தைப் பற்றிய தகவலை அவர்களுக்கு கொடுத்து, முறையாக அனைவருக்கும் திருமண அழைப்பிதழைக் கொடுங்கள்.

பேசுதல் மற்றும் உணர்வை வெளிப்படுத்துதல்



ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது மற்றும் உங்களுடைய உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமலிருந்தால், உங்களுடைய திருமணம் மரண அடியாகவே இருக்கும். எனவே, முடிந்த வரை முன்பே பழகிக் கொண்டு, துன்பத்தை விரட்டுங்கள்.

எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்கவும்



பழகுங்க! பழகுங்க! பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியமாலிருந்தால், உங்களுடைய திருமண வாழ்க்கை கடினமாகி விடும். எனவே, இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

சமைக்கத் தெரிந்து கொள்ளவும்



உங்களுடைய எதிர்கால மனைவியிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழல்களில் வாழ்க்கையை காப்பாற்றும் அம்சமாகவும் சயைமல் இருக்கும்.

நிதிநிலைய ஒழுங்குபடுத்துதல்



இதுவரையிலும் நீங்கள் எப்படித் தான் கடினமாக வாழ்க்கையை நடத்தியிருந்தாலும், எதிர்வரும் காலத்தில் உங்களுடைய வங்கிக் கணக்குகள் வெயிட்டாக மாற வேண்டிய அவசியம் உருவாகும். எனவே தயாராகுங்கள்.

குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொள்ளவும் 



உங்களுடைய பணத்தை, துணைவியாருடன் சேர்ந்து எப்படி நிர்வகிப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மனைவி சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் போது, நீங்கள் ஊதாரித்தனமாக சூறையாட வேண்டாம். எனவே, பணத்தை எப்படி செலவு செய்வது என்று திட்டமிட்டு விட்டால் தான், மற்ற விஷயங்கள் எல்லாம் வேகமாக நடக்கும்.

தனியாக பயணம் செய்யுங்கள்



ஏதாவதொரு இடத்திற்கு தனியாக சென்று, இதுவரை நீங்கள் பெறாத அனுபவங்களை உங்களுக்குள் தேடுங்கள். இந்த அனுபவம் உங்களுக்கு மிகவும் மறக்க முடியாததாக இருக்கும்.

படிப்பு




நீங்கள் விரும்பியதையெல்லாம் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அது கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்வதாகவோ அல்லது ஸ்பானிய மொழியாகவோ கூட இருக்கலாம். ஏனெனில், இது போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளுக்கு திருமண வாழ்வில் இடம் கிடைப்பது அரிது.

உங்களுடைய விருப்பத்தை தொடருங்கள்



ஏனெனில், நம்மில் பெரும்பாலானவர்கள் உண்மையில் செய்ய விரும்புவதும் மற்றும் செய்து கொண்டிருப்பதும் வெவ்வேறான பணிகளே! எனவே உங்களுக்கு விருப்பமானதை கண்டு பிடியுங்கள், அதை செய்வதில் சில மணிநேரங்களை செலவிடுங்கள்.

குழந்தைகள் பற்றிய எண்ணம் எப்பொழுது?



 எத்தனை குழந்தைகள் என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். அதே போல குழந்தையை பெற்றுக் கொள்ளும் முன்னதாக, நிதி நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த விஷயங்களை முதல்படியாக யோசித்து, திருமண வாழ்க்கையின் வசந்தத்திற்கு தாயாராகுங்கள்.

ஒழுக்கமான மனிதராக வாழத் தொடங்குங்கள்



உங்களுடைய வீட்டில் சிகரெட் பிடித்த துண்டுகளுக்கும், ஒயின் குடித்த பாட்டில்களுக்கு இடம் கொடுத்திருந்தால், இனிமேலாவது சாதாரணமான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். ஏனெனில், திருமணத்திற்கு பின்னர் விடுதியிலோ அல்லது பேயிங் கெஸ்ட்-ஆகவோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

நான் எதுவரை செல்ல முடியும்?



திருமணத்திற்கான பணிகளை செய்யும் முன்னதாக, உங்களால் எந்த அளவிற்கு சமாளிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இந்த முடிவின் போது, பல்வேறு விதமான தொடக்கங்கள் மற்றும் முடிவுகளுக்கான சூழல்களை கணக்கில் கொள்ளவும், இவற்றை தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் திருமணத்திற்குப் பின்னர் செய்ய வேண்டியிருக்கும். மேலும், உங்களைப் பொறுத்த வரையிலும் மற்றும் உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்த வரையிலும் முழுவதும் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.


































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad