அனுஷ்கா-எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே!!!!



அனுஷ்கா-எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே!!!!


 படத்திற்காக உடல் எடை அதிகரித்த அனுஷ்கா





நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் "இஞ்சி இடுப்பழகி" எனும் படத்திற்காக தான் உடல் எடையை அதிகரித்து இருக்கிறார் அனுஷ்கா. இதற்காக இவர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.


20 கிலோ எடை அதிகரிப்பு





குண்டு பெண்ணாக உடல் எடையை அதிகரிக்க ஏறத்தாழ 20 கிலோ எடை அதிகரித்து இருக்கிறார் அனுஷ்கா.


புரதச்சத்து உணவுகள்





20 கிலோ உடல் எடை அதிகரிக்க நிறைய உணவு சாப்பிட்டாராம் அனுஷ்கா. முக்கியமாக நிறைய பிரதச்சத்து உணவு உட்கொண்டாராம் அனுஷ்கா.


கதாப்பாத்திரத்திற்காக உழைப்பு






இந்த படத்தில் குண்டான ஓர் பெண், கேலி கிண்டல் மத்தியில், வைராக்கியமாக உடற்பயிற்சிகள் செய்து எப்படி ஒல்லியாக மாறுகிறார் என்பது தான் கதை என கூறுகிறார்கள்.


யோகா ஆசிரியர்






நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே யோகா ஆசிரியாராக இருந்து வந்தவர் அனுஷ்கா. ஆதலால் தான் மற்ற நடிகைகள் போல இன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ஒரே மாதிரியான உடல்வாகினை பராமரித்து வருகிறார்.


தினமும் யோகா






தினமும் யோகா செய்யும் பழக்கம் கொண்டவர் அனுஷ்கா, இது தான் இவரது உடல் மற்றும் மனதினை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறதாம்.


பழைய அனுஷ்கா எப்போது வருவார்?






இவர் குண்டானதை கண்டு பல நாயகிகள் வியப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். மீண்டும் இவர் எப்போது பழைய நிலைக்கு மாறுவார் என்ற யோசனையில் இருக்கிறார்கள். இஞ்சி இடுப்பழகி படப்பிடிப்பு முடியும் போது மீண்டும் பழைய அனுஷ்கா வந்துவிடுகிறார். படத்தின் இறுதியில் இவர் ஒல்லியாக மாறுவதே கிளைமாக்ஸ்.


"லேடி சியான்"







இஞ்சி இடுப்பழகி போஸ்டர்களில் குண்டு அனுஷ்காவை கண்டு வியப்படைந்த ரசிகர்கள், இவரை "லேடி சியான்" என்று அழைத்து வருகிறார்கள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url