Type Here to Get Search Results !

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில் கைது







நடிகர் செந்தில் ஏன் கைது செய்யப்பட்டார் இதுதான் தற்போதைய ஹாட் டாபிக். வானொலி தொகுப்பாளராக இருந்த மிர்ச்சி செந்தில் தொடர்ந்து சின்னத்திரை சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மிகப்பிரபலம் ஆனார். பின்னர் ஹீரோவாகவும் நடிக்கத் துவங்கியவர் இப்போது இந்த ஒற்றை வீடியோவில் பரபரப்பாகிவிட்டார்.    என்ன பாஸ் இப்படி பண்ணீட்டீங்களே? என்றவுடன். பார்ரா! தெரியாத மாதிரி கேக்கறீங்க. இந்தக் குற்றத்துல உங்களுக்கும் பங்கு இருக்கு யுவர் ஆனர் ஒத்துக்கங்க. என ஆரம்பித்தவர் எல்லாமே ஒரு நிகழ்ச்சிக்காகத்தான். மிர்ச்சியில புதுசா ஆரம்பிக்கப்போற ஒரு நிகழ்ச்சிக்காகத்தான் இந்த டகால்டி வேலையெல்லாம். நீங்க நான் ராஜா சார்ங்கற நிகழ்ச்சியோட ஃபேமஸ் நான் சொல்லித் தெரியவேண்டியதில்ல. அத பீட் பண்ணனும்னு எவ்வளவோ யோசிச்சு எந்தப்  புது ஐடியா பண்ணினாலும் அது அந்த அளவுக்கு பெரிய விஷயம் ஆகலை. ராஜா சாராச்சே.  ஏதாவது புதுசா செஞ்சே ஆகணும்ங்கற கட்டாயம். சுட்டகதைன்னு நிகழ்ச்சிக்கு பேரு வெச்சோம் அந்த நிகழ்ச்சிக்கான புரமோ தான் இது. பரந்தாமன் கதைகள்னு ஒரு நிகழ்ச்சிக்காக நிறைய கதைகள் விகடன்,அப்பறம் நண்பர்கள், உறவுகள், படிச்ச கதைகள்னு சுட்டு சுட்டுக் கதைகள் சொல்லிட்டு இருந்தேன். சரி இதுக்கு சுட்டகதைன்னே வெச்சு கொஞ்சம் பிரபலமாக்கலாம் வேற லெவலுக்கு கொண்டுபோகலாம்னு யோசிச்சப்போதான் எங்களுக்கு இந்த கைது ஐடியா வந்துச்சு. கதைய சுட்ட செந்தில் கைது இதுதான் அந்த வீடியோவோட ஒன்லைன்.  அதுவும் வீடியோவா ஷூட் பண்ணா கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்கன்னு ஒரு மொபைல் வீடியோவாவே கொஞ்சம் அசச்சு, நகர்த்தினு ரியலிட்டியா செஞ்சோம். அவ்ளோ தான் பத்திக்கிச்சு. சரி ஏதாவது எழுதுவாங்கன்னு பார்த்தா. கடைசியில குடும்பத்துலயே குண்டு வெச்சிட்டாங்க.வரதட்சணைக் கொடுமை மிர்ச்சி செந்தில் கைதுன்னு தலைப்பு. பக்குன்னு இருந்துச்சு. ஆளாளுக்கு போன் பண்ணி என்ன மச்சி இப்படிப் பண்ணிட்டனு ஆரம்பிச்சாங்க.  கொஞ்சம் முக்கியமான புள்ளிகள் என்ன தம்பி ஏதும் பிரச்னையா அண்ணன் ஹெல்ப் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. நிறைய சினிமா, டிவி சார்ந்த ஃப்ரண்ட்ஸ்களும் ரொம்பவே அக்கறையா விசாரிச்சப்ப தான் இந்த வீடியோ எவ்ளோ பெரிய விஷயம் ஆச்சுன்னு தெரிஞ்சது.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad