ரஜினி நடிக்கும் கபாலியில் புதிய வில்லன் !



                                  ரஜினியின் சினிமா கேரியர் லிங்காவிற்கு பிறகு டோட்டலாக மாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவரது படங்களில் தொடர்ந்து ஒரே டெக்னீஷியன்கள், குறிப்பிட்ட சில இயக்குனர்கள் என்று இருந்து வந்த நிலை மாறி தற்போது கபாலியில் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர் நடிகைகள் என மாறியுள்ளனர். அதோடு, இரண்டே படங்களை இயக்கிய ரஞ்சித் கபாலியை இயக்குகிறார். அந்த வகையில், இந்த படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட இளவட்ட டீம் ரஜினியுடன் இணைவது முடிவான நிலையில், வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில், பிரகாஷ்ராஜின் பெயரும் அவர்களின் பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக பல படங்களில் வில்லன் உள்பட பலதரப்பட்ட கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள ஜான்விஜய் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், செப்டம்பர் 17-ந்தேதி மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த டைரக்டர் ரஞ்சித், தற்போது சென்னையில் கபாலி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். மெட்ராஸ் என்ற ஹிட் படமெடுத்தவர் என்பதால் ஒரு செண்டிமென்ட்டுக்காக மெட்ராஸில் கபாலி படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url