Type Here to Get Search Results !

அஜித் படத்திலும் பேய் இருக்கிறதா?









சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும்
நிலையில் இருக்கிறது. ஆனால் படத்துக்கு இன்னும் பெயர் வைத்தபாடில்லை. விநாயகர்சதுர்த்தியன்று படத்தின் பெயரை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது அறிவிக்கவில்லை எப்போது அறிவிப்பார்கள் என்பது பற்றிய தகவலும் இல்லை. அதற்குக்காரணம் பெயர் பற்றி அவர்களே ஒரு முடிவுக்கு வராததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ஆரவாரம், சரவெடி உள்ளிட்ட சில பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் அறிவிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அவற்றில் எதுவும் இருக்காது என்றும் புதிதாக ஒரு பெயரும் சொல்லப்படுகிறது.

அந்தப்பெயர் வேதாளம். இப்படி ஒரு பெயர் பரிசீலனையில் இருக்கிறதென்றால் படத்தில் பேய் இருக்கிறதா? என்கிற சந்தேகமும் வருகிறது. வி என்கிற ஆங்கில எழுத்தில் பெயர் தொடங்கவேண்டும் என்பதற்காகவும் இந்தப்பெயர் வைக்கலாம் என்கிற பேச்சு இருக்கிறதாம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad