பாகிஸ்தானில் ஒரு மலிங்காவை கண்டுபிடித்த வாசிம் அக்ரம்!


    











    மலிங்காவை போல் பந்துவீசும் திறமை கொண்ட ஒருவரை முன்னாள் 

பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கண்டுபிடித்துள்ளார்.

சமீபத்தில் கராச்சி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 

இளம் வீரர்களுக்கு பந்துவீச்சு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்திருந்தது.

இந்த இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி முன்னாள் 

அணித்தலைவர் வாசிம் அக்ரமுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அப்ராஸ் கோசோ என்ற இளம் வீரரின் பந்துவீச்சு 

திறமையையும், அவர் பந்துவீசும் ஸ்டைலும் வாசிம் அக்ரமை ஈர்த்தது.

காரணம் அவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 

போன்று பந்துவீசி மிரட்டினார்.

ஆனால் இவர் மலிங்காவை போன்று தனது இடது கையால் பந்துவீசி 

அசத்துகிறார். மலிங்கா தனது வேகத்தாலும், யார்க்கர் பந்தினாலும் 

எதிரணியை மிரட்டக் கூடியவர்.

இந்நிலையில் இவர் போன்று பந்துவீசும் அப்ராஸூக்கு தீவிர பயிற்சி 

அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளார் வாசிம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url