விஜயை சூடேற்றும் நடிகர் !
இதுவரை விஜய்க்கும் ,அஜித்துக்கும் தான் போட்டியாக இருப்பதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அவ்வப்போது கைகுலுக்கி கொள்வதால் இப்போது அந்த மாயை மறைந்து விட்டது. ஆனால் சமீபகாலமாக நடிகர் சங்க தலைவராக போட்டியிடப்போவதாக சொல்லி அதிலிருந்து விலகிய விஷால் , நலத்திட்ட உதவிகளை அடுக்கடுக்காக செய்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருவதோடு, தளபதி நடிகர் என்னென்ன செய்து வருகிறாரோ அதை அப்படியே தானும் பின்பற்றி வருகிறார். இந்த செயலால் விஜய் ரொம்பவே சூடேற்றி விட்டாராம் . ஆனபோதும், இப்போது அவரைப்பற்றி வாய் திறந்தால் அதுவே அவரை பெரிய ஆளாக்கிவிடும். இந்த மாதிரி நடிகர்களெல்லாம் ஆடிக்காத்து மாதிரி வருவார்கள் போவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்களாம்.