பாடகராக புதிய அவதாரம் எடுக்கும் சச்சின் டெண்டுல்கர்










இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்திய பிரதமர் மோடி தான் பதவியேற்றவுடன் பதவியேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைவரும் இதில் இணைந்து இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  மேலும், இந்த திட்டம் எளிதில் அவரிடமும் சென்றடைய சச்சின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை இந்த திட்டத்திற்கு தூதுவராக நியமித்தார்.  இந்நிலையில் இந்த திட்டத்திற்காக சச்சின் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படத்தில் சச்சினுடன் சங்கர் மகாதேவன், பிரசூன் ஜோஷி மற்றும் பபூல் சுப்ரியோ ஆகியோர் உள்ளனர். அதே சமயம் அந்த பாடல் வரிகளை அவர் குறிப்பிடவில்லை.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url