கமல், அரவிந்த்சாமி வரிசையில் சிம்பு

கமல், அரவிந்த்சாமி வரிசையில் சிம்பு







    

சின்னத்திரையில் தன்னுடைய செல்வாக்கினால் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார் குஷ்பு. இப்போதும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகர்களைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
   “சிம்ப்ளிகுஷ்பு” என்கிற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்நடிகர் ஜெயம்ரவி. அதில் அவர் பல முக்கியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரையடுத்து கமல்,  கார்த்தியையும் அதற்கடுத்து அரவிந்தசாமியையும் பேட்டி எடுத்திருக்கிறார் குஷ்பு. 

நான்காவதாக அவர் பேட்டி எடுத்திருப்பது சிம்புவை. அடுத்தடுத்த வாரங்களில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறதாம். தொடக்கத்திலேய பெரிய நடிகர்களை அழைத்து வந்திருப்பதால் குஷ்பு வெயிட்டானவர்தான் என்று சொல்லப்படுகிறது. 

அதேநேரம், இதே தொலைக்காட்சி சார்பாகப் பேட்டி கேட்டால் இந்த நடிகர்கள் எல்லாம் பேட்டி தருவார்களா? நிச்சயம் தரமாட்டார்கள், ஆனால் பேட்டி எடுப்பவர் குஷ்பு என்பதால் எல்லோரும் ஒடிவந்து பேட்டி கொடுக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url