Type Here to Get Search Results !

புற்றுநோய் உயிர்க் கொல்லி அல்ல!




புற்றுநோய் உயிர்க் கொல்லி அல்ல!






பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும், புற்றுநோய் தாக்கக் கூடும். உடலில் முடி மற்றும் நகத்தைத் தவிர எல்லாப் பகுதிகளையும் புற்றுநோய் பாதிக்கக் கூடும். உடலில் பாதிப்படைந்த அணுக்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து புற்றுநோய்க் கட்டியாகிறது. இந்தக் கட்டிகள் பல வகைப்படும்.



புகை பிடித்தல், மது அருந்துதல், அதிக உடல் பருமன், சில வகையான நோய் தாக்குதல் புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் சில.

ஆறாத புண், இடைவிடாத இருமல், வலியில்லாத கட்டி, பசியின்மை, எடை குறைதல், விழுங்குவதில் சிரமம். குரல் மாற்றம், அதிக சோர்வு போன்றவை புற்று நோய்க்கான சில அறிகுறிகள். புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலுமாக குணமாக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

புற்று நோயைக் கண்டறிய திசு பரிசோதனை. அல்ட்ராசோனோகிராபி, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் உதவுகின்றன. புற்று நோய்க்கு எதிரான மருந்துகளை ஊசி மூலம் உடலில் செலுத்துவது கீமோதெரப்பி முறையாகும். ரத்தத்தின் வழியாக மருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் போவதால் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.
கீமோதெரப்பியில் பல வகைகள் உள்ளன. அதில் 'டார்கெட்டட்' தெரப்பி எனப்படுவது புற்றுநோய் செல்களை மட்டும் சென்று அழிக்கக் கூடியது. ஆதலால் பக்க விளைவுகளே இல்லை என்று சொல்லலாம்.

வெளிப்புறக் கதிர்வீச்சை வேரியன் ட்ரிலாஜியின் தொழில்நுட்பத்துடன் ரேப்பிட் ஆர்க் சிகிச்சையில் ஐ.எம்.ஆர்.டி., ஐ.ஜி.ஆர்.டி. முறைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கதிர்வீச்சு பாதிப்புகள் குறைவாக இருப்பதுடன், கால அவகாசமும் குறைவாக இருப்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உட்புறக்கதிர் வீச்சு சிகிச்சையின் மூலம் நோய் தாக்கப்பட்ட இடத்திலேயே கதிர் வீச்சை நேரடியாகச் செலுத்தி நோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்கு பிரத்யேக நிபுணர்களுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

டாக்டர் ஆர்.மது சாய்ராம்,
புற்று நோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர்,

கோவை மெடிக்கல் சென்ட்டர் மற்றும் மருத்துவமனை


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad