Type Here to Get Search Results !

இரு சக்கர வாகனங்களில் ஏ.பி .எஸ் பிரேகிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்படுகிறது












இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி, இறந்தவர்களின் எண்ணிக்கை 2013ல் 39,353 பேரும், 2014ல் 32524 பேரும் இறந்தனர். தவிர 2013ல் 1.37 லட்சம் பேரும், 2014ல் 1.27 லட்சம் பேரும் இதனால் காயமடைந்துள்ளனர். இந்த புள்ளி விபரங்களை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் 125சிசி க்கு மேற்பட்ட வாகனங்களில் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதனை சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உறுதி செய்துள்ளார். இதை வாகனங்களில் அமல்படுத்துவதற்கான காலக் கேடு ஏப்ரல் 2017 என கூறியிருந்த இந்திய அரசு, தற்போது ஏப்ரல் 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தின் வேலை என்னவென்றால், ப்ரேக்கிங் பவரை சக்கரங்களுக்கு நிலையாக வழங்கி, வாகனம் நிறுத்தப்படும் தூரத்தை குறைப்பது தான். தவிர வழுக்கலான நிலப்பரப்பில், வீல்களை லாக் ஆக விடாமல், வாகனத்தை பத்திரமாக நிறுத்துவதற்கு உதவும். தவிர ஹெல்மெட் பயன்படுத்துவதனால் சாலை விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்களில், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இருக்கும் பைக்குகள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்180, பஜாஜ் ஆர்எஸ்200, கேடிஎம் ட்யுக் 390, ஆர்சி390, ஹோண்டா சிபிஆர் 250 ஆகியவை ஆகும். தவிர ஃபாஷ் மற்றும் கான்டினென்டல் நிறுவனங்கள், பைக்குகளுக்கான சிங்கிள் மற்றும் டபிள் சேனல் கொண்ட ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை தயாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad