ட்விட்டரில் தெண்டுல்கரை முந்தினார் கோலி..



ட்விட்டரில் தெண்டுல்கரை முந்தினார் கோலி



இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு டுவிட்டரில் 80 லட்சம் ரசிகர்களை பெற்றும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை முந்தியுள்ளார். 80 லட்சம் பேர் டுவிட்டரில் தன்னை பின்பற்றுவர்களுக்கு தனது நன்றி தெரிவித்துள்ள விராட் கோலி, தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில் விராட் கோலி தெரிவித்துள்ளதாவது:-  டுவிட்டர் பக்கத்தில் என்னை 80 லட்சம் ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது மகத்தான அன்பு வைத்த ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற இலங்கை- இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். 

விராட் கோலிக்கு அடுத்தபடியாக டுவிட்டர் பக்கத்தில், தெண்டுல்கரை பின்பற்றுவர்கள் 7.73 மில்லியன் ரசிகர்களும்,  கேப்டன் தோனியை  4.52 மில்லியன் ரசிகர்களும் பின்பற்றுகிறார்கள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url