ஃபியட் லீனியா அபார்த்!








ஃபியட் நிறுவனம், அபார்த் புன்ட்டோ காரை, புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில்

நடந்த அபார்த் 595  Competizione காரை அறிமுகப்படுத்தும் விழாவில் காட்டி

முன்னோட்டம் விட்டது. அவர்கள் எதிர்பார்க்காத வகையில், அபார்த் 595

 Competizione காரை விட, அபார்த் புன்ட்டோ கார் தான் அனைவரின்

லைக்குகளையும் பெற்றது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஃபியட் நிறுவனம்,

 ஃபியட் அவென்சுரா அபார்த் காருக்கு அடுத்தபடியாக, ஃபியட் லீனியா அபார்த்

காரை தயாரிக்கும் முடிவில் உள்ளது.

143bhp சக்தியை வழங்கும் 1.4 லிட்டர் T-Jet இன்ஜின், இந்த 2 கார்களிலும்

பொருத்தப்பட இருக்கிறது.  பின்பக்க டிஸ்க் பிரேக்குகள்,  ஸ்டிஃப்

சஸ்பேன்ஷன், குறைக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அபார்த்

டிஸைன் மாற்றங்கள் ஆகியவை இவ்விரண்டு கார்களுக்கும் சேர்க்கப்பட

இருக்கின்றன. ஃபியட் லீனியா விற்பனையில் வெற்றி பெறாமல்

போனதற்கான காரணம், சற்று பழைய டிஸைன் மற்றும் சுமாரான

பெர்ஃபாமென்ஸ் கொண்ட இன்ஜின். இந்த மைனஸ்களை அபார்த்

வேரியன்டில் திருத்தி, கொடுக்கும் காசுக்கு மதிப்பாகவும், ஓட்டுவதற்கு

சிறப்பான காராக இருக்கும் லீனியாவிற்கு, புத்துண்ர்ச்சியை அளிக்க

முடிவெடுத்துள்ளது ஃபியட் நிறுவனம்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url