பணிப்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்






காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் பணியிடத்துக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்களாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை நிரப்ப ஆதிதிராவிடர் (அருந்ததியர்), இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த தகுதியான நபரை தேர்வுக்குழு மூலம் நிரப்பிக் கொள்ள தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் தகுதியான நபர்கள் வரும் செப்டபம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url