ராதிகா அப்தே: கபாலி நாயகி சில சுவாரஸ்ய தகவல்கள்!










  ராதிகா ஆப்தே இப்போது ரஜினியின் ‘கபாலி’ ஹீரோயின். ‘போல்டு அண்ட்

பியூட்டிஃபுல் ஹீரோயின்’ என இவரை பாலிவுட்டே கொண்டாடுகிறது.

கங்கனா ரணவத்துக்குப் பிறகு இன்றைய தேதியில் பாலிவுட்டில்

நடிப்புக்காகக் கொண்டாடப்படும் நடிகை ராதிகாதான். புனேவில் பெரிய

நியூரோ சர்ஜன் மற்றும் மிகப்பெரிய மருத்துவமனையான சயாத்ரி

ஹாஸ்பிட்டல்ஸ் சேர்மனான சாருதத் ஆப்தேயின் மகள் இவர்! லண்டனுக்கு

டான்ஸ் படிக்கப்போனவருக்கு மேடை நாடகங்களில் ஈர்ப்பு வந்து

நண்பர்களின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நிறையக் கனவுகளோடு 2005-

ல் பாலிவுட்டில் வந்து இறங்கியவருக்கு துக்கடா ரோல்கள்தான் கிடைத்தன.

2006-ல் பெங்காலி சினிமா இவரை வாரி அணைத்துக்கொண்டது. அனிருத்தா

ராய் சௌத்ரியின் இயக்கத்தில் ‘அந்தாஹீன்’ என்ற படத்தில் ஹீரோயினாக

நடித்தார். படம் தேசிய விருது பெற, தீவிர மாற்று சினிமாக்காரர்களின் முழு

கவனம் ராதிகா மீது படிந்தது. ஆனால் இரண்டு சுமாரான மராத்தி

சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. அதன்பிறகு வாய்ப்புகளே

இல்லாமல் போனதால் நடிப்பு ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க

நினைத்தபோதுதான் ராம்கோபால் வர்மாவிடமிருந்து அழைப்பு.

ஆண்கள் கோலோச்சும் ‘ரத்த சரித்ரா’ படத்தில் ஆன்ட்டி ஹீரோ விவேக்

ஓபராய்க்கு மனைவியாக சின்ன ரோலில் நடித்தார். ‘ஐ யம்’ என்ற மாற்று

சினிமா, ‘சோர் இன் தி சிட்டி’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் நல்ல நடிகை

என்ற பெயரை வாங்கிக் கொடுக்க, தமிழுக்கு பிரகாஷ்ராஜ் ‘தோனி’ படத்தின்

மூலம் கூட்டி வந்தார். அந்த அனுபவத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’

படத்தில் சின்ன ரோலில் நடித்தார். அடுத்தடுத்து பெங்காலி, மராத்தி என

வட்டமிட்டவரை ‘ஐ யம்’ படத்தில் நடித்தபோது பழக்கமான அனுராக்

காஷ்யப், தான் இயக்கிய பெண்ணியத்    தை வலியுறுத்தும் குறும்படமான

‘தட் டே ஆஃப்டர் எவ்ரிடே’ படத்தில் நடிக்க வைத்தார். ‘மிக நேர்த்தியான

இயல்பான நடிகை. பாலிவுட் ஏன் இன்னும் இவரைப் போன்ற நடிகைகளைப்

பயன்படுத்திக்கொள்ளவில்லை?’ என பேட்டி ஒன்றில் கூறினார் அனுராக்.

இது போதாதா..? அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்தன.
       
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘பத்லாப்பூர்’, அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்த் தனின் 

‘ஹன்ட்டர்’ ஆகியவை முக்கியமான படங்கள். கதைக்குத் தேவையான லிப்லாக் முத்தக் 

காட்சிகள் என்றால் போல்டாக நடிக்கக்கூடியவர் என இரண்டு படங்களிலும் நிரூபித்து 

இருந்தார். அனுராக், தான் இயக்கும் பெயரிடப்படாத ஆங்கிலப் படத்தில் நிர்வாணக் 

காட்சியில் நடிக்க வைத்த எடிட்டிங் வீடியோ எப்படியோ இணையத்தில் லீக் ஆகித் 

தீயாகப் பரவியது. அப்போதே நாம் ‘வைரல் ஃபீவர்’ பகுதியிலும் படத்தோடு அதைப்பற்றி 

எழுதியிருந்தோம். ‘அந்த வீடியோவைத் திருடி வெளியிட்ட நபரைக் கண்டுபிடிக்க என் 

வாழ்நாளை செலவளிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அனுராக் கொந்தளித்தார்.

செம வைரல் ஆனது வீடியோ. அதற்கு சில நாட்கள் முன்புதான் ராதிகா ஆப்தேவைப் 

போன்ற உருவ அமைப்புகொண்ட ஒரு பெண்ணின் பாலுறவுக் காட்சிகள் இணையத்தில் 
அவர் பெயரில் வெளியாகி வைரலானது. ‘‘நான் திருமணமானவள். என் கணவர் 
பெனடிக்ட் டெய்லர் என்னை நன்கு புரிந்துகொண்டவர். என் பெர்சனல் வாழ்க்கை வேறு. 
சினிமா வாழ்க்கை வேறு. இமேஜ் குறித்து எனக்கு எந்த மதிப்பீடுகளும் இல்லை. 
இதுபோன்ற விஷயங்களை நேரடியாகவே சந்திக்க விரும்புகிறேன். எந்த 
ஒளிவுமறைவும் இல்லாத என் நேர்மை சிலருக்குப் பிடிக்கும். அதனால் நல்ல 
வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது’’ என்றவர் இமேஜ் பார்க்காது 
அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். சுஜய் கோஷின் பெங்காலி குறும்படம் 
‘அஹல்யா’ பெயரைத் தக்க வைத்தது. இப்படிப்பட்ட நடிகையைத்தான் தேடிப்போய் 
‘இந்தப் படத்தில் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும்’ என காம்ப்ரமைஸ் செய்து 
நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். ச்சும்மா கலக்கணும் ராதிகா
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url