அஜித் படப்பெயர் விநாயகர்சதுர்த்தியன்று அறிவிக்கப்படாதது ஏன்?









 சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயரை விநாயகர்சதுர்த்தியன்று அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அறிவிக்கவில்லை. அதற்குக் காரணம், படத்தின் பெயரை இன்னும் இறுதிசெய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர், இயக்குநர், அஜித் ஆகிய மூவருக்கும் பிடித்தமாதிரியான பெயர் அமையவில்லை, ஒருவருக்குப் பிடித்தால் இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை என்றே போய்க்கொண்டிருப்பதால் இன்னும் இறுதிசெய்யாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், படத்தின் பெயரை முடிவுசெய்துவிட்டார்கள், விநாயகர்சதுர்த்திநாளில் கமலின் தூங்காவனம் படமுன்னோட்டமும் ரஜினியின் கபாலி படத்தின் தொடக்கவிழாவும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்பதால் அதற்கு நடுவே படப்பெயரை அறிவித்து அது பெரிதாகக் கவனிக்கப்படாமல் போய்விடலாம் என்கிற எண்ணத்தில் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை என்று சொல்கிறார்கள். இரண்டில் எது உண்மையோ? படத்தின் பெயரைச் சொல்லவே இவ்வளவு நாட்களா? என்கிற பேச்சும் அதிகமாகிக்கொண்டே போகிறது.      




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url