Type Here to Get Search Results !

சைவம் தான் சாபிடுறோம்னு சந்தோசமா இருக்கீங்களா? வச்சுட்டாங்க ஆப்பு!!!



சைவம் தான் சாபிடுறோம்னு சந்தோசமா இருக்கீங்களா


வெள்ளை சர்க்கரை




சுத்திகரிக்கப்பட்ட உணவு என்று அச்சடித்து விற்றால் நாம் ஆட்டுமந்தை போல ஓடிப்போய் வாங்குகிறோம். அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை என்று விற்கப்படும் சர்க்கரையில் ஆடு, மாடுகளின் எலும்புகள் சேர்க்கப்படுகின்றன. இதை இயற்க்கை கார்பன் (Natural Carbon) என்ற பெயரில் சேர்க்கின்றனர்.

ஆரஞ்சு ஜூஸ்





டப்பாகளில் கண்ணை கவரும் கவர்ச்சியான புகைப்படங்களோடு அடைக்கப்பட்டு விற்கும் ஆரஞ்சு ஜூஸ்கள் என்றால் நமக்கு அவ்வளவு பிரியம் அல்லவா. இதில் "ஒமேகா 3 எஸ்" சத்து என்று கூறி, மீன்களின் மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன.

வெண்ணிலா ஐஸ்க்ரீம்




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீம், வெண்ணிலா ஐஸ்க்ரீம். நேச்சுரல் ஃப்ளேவர் என்ற பெயரில் வெண்ணிலா ஐஸ்க்ரீமில், நீர்நாயின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்படும் ஓர் மூலப்பொருள் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலான வெளிநாட்டு தயாரிப்பு ஐஸ்க்ரீம்களில் இது சேர்க்கப்படுகிறது. (அட, நாம வெளிநாட்டு தயாரிப்பு ஐஸ்க்ரீம் மட்டும் தானே சாப்பிடறோம், மறந்துட்டேன் பாஸ்!!!)

வாழைப்பழம்




வாழைப்பழத்தில் என்ன என்று கேட்கிறீர்களா?? நீண்ட நாள் பழுக்காமல் இருக்கவும், பதப்படுத்தி வைக்கவும், இறால் மற்றும் நண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேவை வாழைப்பழத்தின் மீது தெளிக்கிறார்கள். (புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா....)

சிவப்பு நிற மிட்டாய்கள்








நாம் சாப்பிடும் சிவப்பு நிற மிட்டாய்களில் கருஞ்சிவப்பு நிறத்தை கொண்டுவர, பெண் வகை சார்ந்த "Dactylopius coccus Costa" எனும் நுண்கிருமியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதை "cochineal," "carminic acid" அல்லது "carmine." என்ற பெயர் குறிப்பிட்டு கூறுகிறார்கள்.

பீர் மற்றும் ஒயின்





பெரும்பாலான பிரிட்டன் தயாரிப்பு பீர் மற்றும் ஒயின்களில், மீன்பசைக்ககூழ் எனப்படும் ஓர் மூலப்பொருள் மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்




உருளைக்கிழங்கு சிப்ஸ் இன்றி ஓர் மாலை வேளையா என்று கேள்வி கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நாள் முழுதும், ஏன் அலுவலகத்தில் கூட உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். உண்மை என்னெவெனில், உருளைக்கிழங்கு சிப்ஸில் கோழியில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. (ருசியா இருக்குன்னு, ரசிச்சு சாப்பிட்டிருப்பீங்களே, அதுக்கு இது தான் சாமி காரணம்!!!)


கேக் மிக்ஸ்




பெரும்பாலும் முட்டை கலந்து தான் கேக் தயாரிக்கிறார்கள். ஆனால், கேக் மிக்ஸ் என்று ஒன்று இருக்கிறது. சுலபமாக கேக் சமைக்க இது உதவும். இதில் பன்றி இறைய்ச்சி அல்லது பன்றி கொழுப்பு சேர்க்கப்படுகிறது என்பது தான் அதிர்ச்சியான உண்மை.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad