ஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை















நடிகை பூஜா மிஸ்ரா ஹோட்டல் ஊழியரை அடித்து அவரின் மொபலை

பறித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை  பூஜா மிஸ்ரா அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம்  பூஜா மிஸ்ரா,  நடிகை சோனாக்‌ஷி சின்கா உள்பட 5 பேர் மீது தனக்கு எதிராக சதி செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.

தற்போது ஹோட்டலில் ஒருவரைத் தாக்கிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அது வீடியோவாகவும் இணையதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அந்த வீடியோ காட்சியில், மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர  ஹோட்டல்  ஊழியர்  ஒருவர் பூஜா மிஸ்ராவை பின் தொடர்ந்து தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த மிஸ்ரா அவரது மொபைல் போனை பறித்து கீழே போட்டு உடைத்தார்.அதோடு மட்டுமல்லாமல் அந்த ஊழியரை  அடித்து உதைக்கவும் செய்கிறார்.

பூஜா மிஸ்ரா, ஹோட்டலில் தங்கிவிட்டு பில் கொடுக்காமல் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பியதாகவும், அதனால் தான் ஊழியர்கள் இவ்வாறு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து பூஜா மிஸ்ரா கூறுகையில், " நான் மன்னிப்புக்  கேட்டுக்  கொள்கிறேன். ஆனால் ஹோட்டல்   நிர்வாகம்  தனது விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஊழியர்களுக்குக்  கற்றுக்  கொடுக்க வேண்டும்"என்று கூறி உள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url