சிங்கம்-3ல் ஜாக்கிசான் பாணியில் சூர்யா!




                                             சிங்கம் படத்தில் தூத்துக்குடியில் ஒரு சிறிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம் என்கிற சூர்யா, பின்னர் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராகி விடுவார். அதையடுத்து சிங்கம்-2 படத்தில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருப்பவர், ஒருகட்டத்தில் தூத்துக்குடி கடல்பகுதியில் நடக்கும் போதை கடத்தல் கும்பலை கண்டுபிடித்து சிறைபிடித்தார். இந்நிலையில், அவர் அடுத்து சிங்கம்-3 படத்தில் நடிப்பதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். முதல் இரண்டு பாகங்களிலும் தமிழ்நாடு போலீசாக நடித்த சூர்யா, இந்த 3வது பாகத்தில் இந்திய காவல்துறை அதிகாரியாக சிஐடி வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, வில்லன் டேனி சபானியை ஜெயிலில் அடைத்து விடுவதோடு அவர் வேலை முடியவில்லையாம. அவருக்கு உள்நாடு, வெளிநாடுகளில் எந்தெந்த நபர்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இந்த பாகத்தில் கண்டுபிடிப்பதுதான் சூர்யாவின் முக்கிய வேலையாம். அதனால், இந்த சிங்கம்-3 படத்தில் உள்நாட்டை விட வெளிநாடுகளில்தான் அதிக காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். குறிப்பாக, ஜாக்கிசான் படங்களைப்போன்று வெளிநாட்டு வீதிகளில், கட்டிடங்களில் துள்ளிக்குதித்து சூர்யா சாகச சண்டை செய்யும் காட்சிகளும் இந்த பாகத்தில் அதிகமாக உள்ளதாம். அதனால் ஹரியின் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு இணையாக சிங்கம்-3 உருவாக உள்ளதாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url