பேய்ப்படத்தில் பிரமாண்ட அம்மன் -அரண்மனை 2 படக்குழுவின் சாதனை முயற்சி!








சுந்தர்சியின் இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, மற்றும் பூனம் பஜ்வா என மூன்று ஹீரோயின்கள் கலர்ஃபுல்லாக கலக்க இருக்கும் பேய்ப் படம் தான் அரண்மனை2.படத்திற்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி.
வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா, மற்றும் சுந்தர் சி உள்ளிட்டோர் நடிப்பில் முதல் பாகமாக வெளியான அரண்மனை படத்தின் அடுத்த பாகமாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கிய இந்தச் சிலை ஆசியாவிலேயே பெரிய சிலையாம்  இதை லிம்கா புத்தகத்தில் சேர்க்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குருராஜும் அவரது குழுவும் 40 நாட்கள் எடுத்துக்கொண்டு இந்தப் பெரிய சிலையை உருவாக்கியுள்ளனராம். மேலும் ஆதி இந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காக மிகவும் சிரத்தையுடன் ஒரு அம்மன் பாடலை உருவாக்குவதில் பிசியாக இருக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளனர்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url