நடிகர் சங்கத் தேர்தல்: அக்.1-இல் வேட்பு மனு தாக்கல்












         தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும்

அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

 2015-2018-ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு

செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி சென்னை

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்

பள்ளியில் நடைபெறவுள்ளது.

 இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்பாளர்களின் தகுதி குறித்து

தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மாநாபன்

புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், முன் மொழிபவர், வழி மொழிபவர்

ஆகியோர் 2009-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 7

ஆண்டுகள் சந்தா செலுத்தியிருக்க வேண்டும். தேர்தலுக்கான வேட்பு மனு

தாக்கல் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இதைத்

தொடர்ந்து, 3-ஆம் தேதி மாலை 5 மணி வரையில் வேட்பு மனு தாக்கல்

செய்யலாம். இதையடுத்து வேட்பு மனுக்களின் பரிசீலனை அக்டோபர் 4-ஆம்

தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் 7-ஆம் தேதி

மாலை 5 மணிக்கு முன்பாக தேர்தல் அலுவலகத்தில் தமது விலகல்

கடிதத்தை கையெழுத்திட்டு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்களின்

இறுதிப் பட்டியல் அக்டோபர் 8-ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்படும் என

அதில் கூறப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url