Type Here to Get Search Results !

கொடிவேலியின்(Plumbago Zeylanica) மகத்தான மருத்துவ குணம்


                                           கொடிவேலி (சித்ரகம்)
                                     (Plumbago Zeylanica)

அமைப்பு 
        கை அளவு  உயரம் உள்ள நெடுநாள் வாழக்கூடிய புதர் போல் மண்டி வளரும்  மூலிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் இதன் அடித்தண்டிலிருந்து புதிய கிளைகள்  தோன்றி வளரும். இதன் தண்டு மெல்லிய முடிச்சுகளுடன் சுனை கொண்டிருக்கும். மலர் காம்புகள் வழவழப்பாகவும் சிறு ரோமங்களைப் போன்ற ஊகைகளைக் கொண்டிருக்கும்.

           இதன் வேர் கட்டைவிரல் பருமனுக்கு சதைப்பற்று மிகுதியாகக் கொண்டிருக்கும். தண்ணீர் விட்டான் கிழங்கின் மேல் இருப்பது போல் இதன் வேரின் மேல் நாரைப் போன்ற பொருள் சுற்றிக் கொண்டிருக்கும். இந்தச் செடி புரட்டாசி தை மாசி மாதங்களில் பூக்கும். மலர்கள் வெண்மை, கருநீலம், சிவப்பு, மஞ்சள் நிறங்களில் நான்கு வகைப்படும். இவற்றில் கருநீலப்பூ சிறந்தது. வெண்மை சிகப்பு நிறம் கொண்ட மலர்கள் எங்கும் காணப்படுகின்றன. மஞ்சள் கருநீலம் கொண்ட மலர்கள் அரிதாகக் கிடைக்கின்றன.

விளைநிலம் 
                நம் நாட்டில் எங்கும் விளையும். சிறப்பாகத் தெலுங்கானா, அஸ்ஸாம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

தன்மை 

             செரிமானமாகும் பொழுது கார்ப்புச் சுவையாக மாறும். சடராக்கினியை வளர்க்கும்.  சீரணத் தன்மை கொண்டது. வறட்சித் தன்மை கொண்டது. உஷ்ணவீரியும் மிக்கது.

தீர்க்கும் நோய்கள் 
               கிரஹணி , குஷ்டம் வீக்கம் கிருமிநோய் இருமல் கபவாத நோய் பித்த நோய் வாதத்தினால் தோன்றிய மூலம் முதலியவைகள் நீங்கும். மலத்தைக் கட்டும். இதன் இலையை பசுமாட்டுக் கோமியத்தொடு சேர்த்து வெண்புள்ளிகள் மீது பூச குணமாகும்.
           

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad