Type Here to Get Search Results !

சிறுநீரக நோய்களுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் அருமருந்தாக பயன்படும் கொத்துமல்லி(Coriandrum Sativum)

 

                                   கொத்துமல்லி (தான்யகம்)
                                   (Coriandrum Sativum)

அமைப்பு 
                  இது சிறு செடிகளாக வளரும். செடிகளின் நரம்பு போன்ற காம்புகளில் விதைகள் தோன்றுகின்றன. இவ்விதைகள் தனியா எனப்படும். நம். நாட்டில் எங்கும் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக உத்திரபிரதேசம், வங்கம் என்னும் இடங்களில் பயிர் செய்யப்படுகிறது.

தன்மை  
         தனியா இனிப்புச்சுவையும், துவர்ப்புச்சுவையும், சீதவீரியமும் கொண்டது. எண்ணெய்ப் பசை கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். லேசானது. செரிமானத்தை வளர்க்கும். சுவையை உண்டாக்கும். கண்களில் ஏற்படும் தேய்மானம்(Vascular Degeneration & Vascular Hypertension) 1 அ 2 துளி கண்ணில் விட குணமாகும்.கண்களில் கருவளையம், சுருக்கம் ஆகியவற்றை நீக்க கொத்துமல்லி பசையை கண்களைச் சுற்றி போட வேண்டும்.            

        வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் குணமாகும். அம்மைக்கு மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு துணை மருந்தாக(Adjuvant Therapy) பயன்படுகிறது.

தீர்க்கும் நோய்கள் 
                  காய்ச்சல், மூன்று தோஷங்கள், நாவறட்சி, வாந்தி, இருமல், இளைப்பு முதலியவற்றைப் போக்கும். டிக்கடி ஏப்பம்(Aeropatia) வராமல் இருக்க நீர் + தனியா விதை + சுக்கு + பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க குணமாகும்.

                  தனியா விதை + சோம்பு +  பால் சேர்த்து கொதிக்க வைத்து,  இனிப்புக்காக சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வர, கருவுற்ற  பெண்களுக்கு கால், கை,  குடலில் ஏற்படும் நீரேற்றம் குணமாகும். இரத்தம் கலந்த சிறுநீர் வரும் நிலை குணமாகும்.நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, ஈரலைப் பாதுகாக்கிறது.
                  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad