Type Here to Get Search Results !

கொன்றை(Cassia Siamea) அரிய மருத்துவ குணங்கள்



                                                   கொன்றை(ஆரக்வதம் (அ) சதுரங்குலம்)
                                                              (Cassia Siamea)
தன்மை 
                 பளுவானது. இனிப்புச்சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது . மலத்தை இளக்கி(Laxative) வெளித்தள்ளக்கூடியது. மென்மையானது.

தீர்க்கும் நோய்கள் 

  • கொன்றை - காய்ச்சல், இதய நோய், வாத இரத்தம் மற்றும் மேல்நோக்கிச் செல்லும் வாயு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் சிறந்தது.
  • இதை சிறுவர்கள், முதியோர்கள், மார்புக்குள் அடிபட்டுக் காயம் அடைந்த நோயாளிகள், வலிவு குறைந்தவர்கள் மற்றும் மென்மையான உடல் அமைப்பு உள்ளவர்கள் மலம் கழிக்க கொடுக்கலாம். அதனால் உடல் சுத்தமடைந்து வன்மையான உடல் அமைப்பை பெறலாம். 
  • இதன் பழம், இலை மற்றும் வேர் முதலானவற்றை டிக்காஷன்-ஆக செய்து உள்ளுக்கு குடித்து வர காய்ச்சல், மஞ்சள் காமாலை, நீரிழிவு, தோல் நோய்கள், உள் உறுப்புகளில் காயங்கள் குணமாகும்.
  • பழுக்கும் பருவத்தில் நன்கு முதிர்ந்த கொன்றைப் பழங்களை எடுத்து வந்து மணற்குவியலுக்குள் ஏழு நாள் புதைத்துப் பிறகு வெளியில் எடுத்து வெயிலில் உலர்த்தி பழத்தின் கதுப்பைச் சுத்தமான மண்பாண்டத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  
  • நான்கு வயதுக்கு மேற்பட்டு பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும் எரிச்சல் மேல் நோக்கிச் செல்லும் வாயு , கொன்றைப் பழத்தின் கதுப்பைத் திராட்சை ரசத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.                     

                  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad