Type Here to Get Search Results !

சிம்புவிற்கு ரஜினி வாழ்த்து !


சி்ம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு திரைப்படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளதை தொடர்ந்து, சிம்புவிற்கு முதல் ஆளாக, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு, பல தடைகள் மற்றும் வழக்குகளை கடந்து வாலு படம் வெளியாக உள்ளது . படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று, ரஜினிகாந்த், தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில், சிம்பு, சந்தானம், ஹன்சிகா நடிப்பில் வாலு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி, 4 முறைகளுக்கும் மேல் அறிவிக்கப்பட்டு ரத்து ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த மாதம் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக, படத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து, கோர்ட் வழக்கு சுமூகமாக முடிவடைந்த நிலையில், இம்மாதம் 14ம் தேதி, படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில், நேற்று (11ம் தேதி) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், டி.ராஜேந்தரும், படம் 14ம் தேதி ரிலீஸ் என்ற தகவலை உறுதி செய்தார். தமிழகம் முழுவதும், படத்தை, டி.ராஜேந்தரே வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad