இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தவான் சதம்- கோலியும் அபார ஆட்டம் !
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் மேத்யூஸ் அதிக பட்சமாக 64 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 6 விக் கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங் சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து இருந்தது. தவான் 53 ரன்னும், கேப்டன், விராட்கோலி 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வீராட் கோலி 90ப ந்து களை சந்தித்து 7 பவுண்டரி யுடன் 50 ரன்னை தொட்டார். 35-வது டெஸ்டில் விளை யாடும் அவருக்கு இது 11-வது அரைசதம் ஆகும். இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 56.2 ஓவர்களில் 200 ரன்னை தொட்டது. தொடக்க வீரர் தவான் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 178 பந்துகளில் 10 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 15-வது டெஸ்டில் விளையாடும் தவானுக்கு இது 4-வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இருந்த கேப்டன் விராட்கோலியும் தொடர்ந்து அபாரமாக விளையாடினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு, 227 ரன் எடுத்து இருந்தது. தவான் 110 ரன்னுடனும், விராட்கோலி 86 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.